அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் நோவக் ஜோகோவிச்

03.11.2021 09:49:46

பரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுப் போட்டியில், நோவக் ஜோகோவிச் வெற்றிபெற்றுள்ளார்.

நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டியில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் ஹங்கேரி வீரர் மார்டன் ஃபுசோவிஸை எதிர்கொண்டார்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில், முதல் செட்டை 6-2 என நோவக் ஜோகோவிச் கைப்பற்றினார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில், பதிலடி கொடுக்கும் வகையில் விளையாடிய ஹங்கேரி வீரர், அந்த செட்டை 6-4 என கைப்பற்றினார்.

இருவரும் தலா ஒரு செட்டைக் கைப்பற்றியதால், வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது செட்டை 6-3 என கைப்பற்றி நோவக் ஜோகோவிச் வெற்றிபெற்றார்.