நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா கைது!.

20.10.2026 08:36:08

தாராபுரம் இடைத்தேர்தலின் போது நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட்டவர் கார்த்திகா. தாராபுரம் தொகுதியில் பல இடங்களிலும் இவர் பிரச்சாரம் செய்தார். அப்போது முதலமைச்சர் விஜயை கடுமையாக விமர்சித்தும் பேசியிருந்தார்.

மேலும் தாராபுரம் தொகுதியில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பிரச்சாரம் செய்ய வந்தபோது அவர் செல்லும் பாதையில் போராட்டம் நடத்தினார். அது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று காலை கோவையில் இருந்த கார்த்திகா மற்றும் அவரின் கணவர் என இருவரையும் தாராபுரம் காவல்துறையினர் கைது செய்தனர், கார்த்திகா மற்றும் நாம் தமிழர் கட்சியினர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது..