ஜூலியன் அசாஞ்சின் குடியுரிமையை இரத்து செய்தது ஈக்வடோர்

28.07.2021 10:22:32

தற்போது பிரித்தானியாவில் சிறையில் இருக்கும் விக்கிலீக்ஸின் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சின் குடியுரிமையை ஈக்வடோர் இரத்து செய்துள்ளது.

தென் அமெரிக்க நாட்டின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்த கருத்திற்கு பதிலளிக்கும் வகையில் ஈக்வடோர் நீதி அமைப்பு கடிதம் மூலம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

அசாஞ்சின் கடிதத்தில் பல முரண்பாடுகள், வெவ்வேறு கையொப்பங்கள், ஆவணங்களை மாற்றியமைத்தல் மற்றும் செலுத்தப்படாத கட்டணங்கள் போன்றவை காணப்பட்டதாக ஈக்வடோர் அதிகாரிகள் கூறுகின்றனர்.

லண்டனில் உள்ள தூதரகத்தில் இருந்து அவரை வெளியேற்றுவதற்காக அப்போதைய ஜனாதிபதி லெனான் மோரேனோ எடுத்த நடவடிக்கையின் பிரகாரம் 2018 ஜனவரியில் ஜூலியன் அசாஞ் ஈக்வடோர் குடியுரிமையை பெற்றிருந்தார்.