யாரை நம்புவது...!!!???
இந்த சந்தேகம் எனக்கு 2009, மே,18, க்கு பின்னர் தமிழ்தேசிய அரசியலில் உள்ளது.!
குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ்த்தேசிய செயல்பாட்டாளர்கள், தமிழ்தேசிய அமைப்புகளில் உள்ள பலர் பல உண்மையான தேச விடுதலைக்காக செயல்படுகிறார்கள் அதில் மாற்றுக்கருத்துகள் இல்லை.
ஆனால்.. அங்கும் ஒருவர் மற்றவர் மீது குறை கூறுவது என்றாலும் பறவாய் இல்லை அவர் இந்த புலனாய்வாளர்களுடன் தொடர்புள்ளவர், அந்த புலனாய்வாளர்களுடன் தொடர்புள்ளவர்.
இவருக்கு தகவல் கொடுப்பவர், அவருக்கு தகவல் கொடுப்பவர் என ஒருவர் மற்றவரை சுட்டிக்காட்டி குறை கூறுவதை காணமுடிகிறது.. அதைவிட அந்த மாற்றுக்கட்சி தலைவருடன் நட்பில் உள்ளவர், அரசாங்கத்தின் நபர் இப்படி பல கதைகளை கூறுவதை காணமுடிகிறது. யார் நல்லவர் என்று கூற முடியாமல், இனம் காண முடியாமல் உள்ளது.
கடந்த இரு வருடங்களுக்கு முன்னர் ஒரு சாரார் என்னை ஜெனிவா வருமாறு அழைப்பு எடுத்தனர் அவர்களின் அழைப்பு வந்து ஒருவாரத்தால் இன்னொரு சாரார் அவர்களும் என்னை அங்கு வருமாறு கூறினர்.
நான் கூறினேன் ஏற்கனவே X, என்ற நபர் என்னை அழைத்தார் நான் எதுவுமே கூறவில்லை இப்போது நீங்கள் வருமாறு கூறுகிறீர்கள் என்றேன்.
உடனே அந்த நபர் எனக்கு கூறியபதில் யார் அந்தX ஆ…. அவர் எமக்கு எதிரானவர் இவரோட தொடர்புள்ளவர் அதற்கு போகவேண்டாம் என்ரார். நான் உடனே முடிவெடுத்தேன் எவர் புலம்பெயர் நாடுகளில் அரசியலுக்காக அழைத்தாலும் நான் செல்வதில்லை என்ற முடிவை எடுத்தேன்..!
இது புலம்பெயர் நாடுகளில் இருந்து உரையாடும்போது எவருமே எல்லோரும் நல்லவர். உறுதியானவர், நேர்மையானவர்.
உண்மையானவர் என கூறியதாக சரித்திரம் இல்லை. இதே நிலைதான் ஈழத்திலும் தமிழ்தேசிய கட்சிகளிலும், தமிழ்தேசிய அரசியல் செய்பவர்கள்.
ஏன் பல பொது அமைப்புகள், தொடர் போராட்டம் செய்யும் (பெயரை குறிப்பிட மாட்டேன்) பல அமைப்புகள், தனிநபர்களும் அவர் இப்படி? இவர் அவரின் ஆள்? அந்த புலனாய்வு, இந்த அரசியல் வாதியின் ஆள் என முத்திரை குத்தி சந்தேகங்களை தூண்டும் செயல்கள் என்றுமில்லாதவாறு அரங்கேறிக்கொண்டிருப்பதை நான் நேரடியாக அவதானித்துள்ளேன். !
அதில் உண்மையும் இல்லாமல் இல்லை.. யாரை நம்புவது என்றே தெரியாத ஒரு நிலையில் தற்போது தமிழ்த்தேசிய அரசியல் உள்ளது.!
இது நான் கடந்த 15, வருடங்களாக கண்ணால் கண்ட காதால் கேட்ட வாயால் பேசிய தீர விசாரித்து அறிந்த உண்மைகள். இது எவரையும் குற்றம் காண்பதற்கு பதிவிடவில்லை!
நான் தற்போது நடக்கும் உண்மைகளை குறிப்பிட்டேன்.
நன்றி பா.அரியநேத்திரன்