ஜனாதிபதியைச் சந்தித்தார் போல் கபூர்!

23.06.2026 15:24:50

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் கலாநிதி போல் கபூர், திங்கட்கிழமை பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்துக் கலந்துரையாடினார்.

    

 

இந்தச் சந்திப்பின்போது, இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள், பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் இரு நாட்டுக்கும் பொதுவான நலன்சார் விடயங்கள் குறித்து விரிவாகக் கருத்துப் பரிமாறப்பட்டன. இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்துவதே இந்தச் சந்திப்பின் பிரதான நோக்கம் என ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.