ஒரு ஆண்டில் டெஸ்ட்டில் அதிக ரன் அடித்த வீரர் - ஜோ ரூட்

28.08.2021 11:20:08

இந்த ஆண்டில் ஜோ ரூட் 11 டெஸ்ட்டில் ஆடி 1389 ரன் எடுத்துள்ளார். இதன் மூலம் ஒரு ஆண்டில் டெஸ்ட்டில் அதிக ரன் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன் குக் 2015ம் ஆண்டில் 1364 ரன் அடித்திருந்தார்

ஜோ ரூட் நேற்று டெஸ்ட்டில் 23வது சதத்தை விளாசினார். இந்தியாவுக்கு எதிராக இது 8வது சதமாகும். இதற்கு முன் அலெஸ்டர் குக் 7 சதம் அடித்திருந்தார். அதனை ரூட் முறியடித்தார்.* இந்த ஆண்டில் மட்டும் ரூட் 6 சதம் அடித்துள்ளார். இன்னும் ஒரு சதம் அடித்தால் ஒரு ஆண்டில் டெஸ்ட்டில் அதிக சதம் அடித்த இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை படைப்பார்.* டெஸ்ட்டில் 23, ஒன்டேவில் 16  என மொத்தம் 39 சதம் விளாசி உள்ள ஜோ ரூட், குக்கின் (38சதம்) சாதனையை முறியடித்தார்.* ரூட் டெஸ்ட்டில் 6வது முறையாக பும்ரா பந்தில் ஆட்டம் இழந்துள்ளார்.

அஸ்வின், ஜடேஜா தலா 5 முறை அவரை அவுட்டாக்கி உள்ளனர்.* இந்திய அணியில் ஒட்டு மொத்தமாக டெஸ்ட்டில் இந்த ஆண்டில் 4 சதங்களே அடிக்கப்பட்டுள்ளன. ஆனால் ரூட் மட்டும் 6 சதம் அடித்துள்ளார். கேப்டனாக ரூட் 12 சதம் அடித்து குக்கின் சாதனையை சமன் செய்துள்ளார்.