மீண்டும் இந்தியாவில் உச்சம் பெறும் கொரோனா !
01.04.2021 10:33:39
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மீண்டும் உச்சம் பெற்றுள்ளது. அந்தவகையில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 72 ஆயிரத்து 182 பேர் தொற்றுக்கு இழக்காகியுள்ளனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 22 இலட்சத்து 669 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் ஒரு கோடியே 14 இலட்சத்து 72 ஆயிரத்து 494 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
அத்துடன் நேற்று ஒரேநாளில் 458 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 62 ஆயிரத்து 960 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை எட்டாயிரத்திற்கும் அதிகமானோரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறுப்பிடத்தக்கது.