1000-க்கும் அதிகமான திரையரங்குகளில் “தலைவன் தலைவி”.

26.07.2025 00:57:13

விஜய் சேதுபதி நடிப்பில் ‘தலைவன் தலைவி’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் 1,000-க்கும் அதிகமான திரைகளில் வெளியானது.

 

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை நித்யா மெனன் நடிப்பில் ‘தலைவன் தலைவி’ திரைப்படம் உருவாகியுள்ளது.

இது விஜய் சேதுபதியின் 52-வது படமாகும். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் நித்யா மேனன், யோகி பாபு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

விஜய் சேதுபதி – பாண்டிராஜ் இருவரும் முதல் முறையாக இணைந்துள்ளதால் இந்த படத்துக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

யோகி பாபு இந்தப் படத்தில் நடித்துள்ளதால் நகைச்சுவை காட்சிகள் அதிகம் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்த படத்திலிருந்து ‘பொட்டல முட்டாயே’ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. கணவன் – மனைவி உறவுவின் சிக்கல்களைப் பேசும் திரைப்படமாக உருவாகியுள்ள தலைவன் தலைவி இன்று 1,000-க்கும் அதிகமான திரைகளில் வெளியாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.