கால்வாயில் இருந்து குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

11.10.2021 03:15:20

கிளிநொச்சி - தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பிரமந்தனாறு பகுதியில உள்ள பிரதான கால்வாயில் இருந்து, நேற்று 10  பிற்பகல், குடும்பஸ்தர் ஒரவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

51 வயதுடைய இராமலிங்கம் புஸ்பராஜ் எனும் 6 பிள்ளைகளின் தந்தையே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று   இரவு, வேலை முடித்து விட்டு, தனது வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த குறித்த நபர், காணாமல் போயிருந்தார். இந்நிலையில்,   சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தருமபுரம் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.