வடக்கு, கிழக்கில் இருந்து இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும்!
|
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தல்கள் மற்றும் அது சார்ந்த குற்றங்களுக்கு இராணுவம் தான் பிரதான காரணம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். |
|
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பட்ஜெட் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில் அமைச்சர் சந்திரசேகர் நேற்று உரையாற்றினார். இதன்போது, வடக்கு, கிழக்கின் கல்விநிலை மற்றும் போதைப்பொருள் மாபியா தொடர்பில் அவர் கருத்துகளை வெளியிட்டார். இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் தெரிவித்ததாவது:- வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தல்கள் மற்றும் அது சார்ந்த குற்றங்களுக்கு இராணுவம் தான் பிரதான காரணம். இதை நாங்கள் நீண்டகாலமாக வெளிப்படுத்தி வருகின்றோம். வடக்கு, கிழக்கில் இருந்து இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும். தமிழர்களின் பகுதிகளில் இருந்து இந்த அரசாங்கம் எப்போது இராணுவத்தை வெளியேற்றும்? - என்றார். |