போரிஸ் ஜோன்சன் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளுகிறார்.

16.03.2021 08:48:54

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன், அடுத்த மாத இறுதியில் இந்தியாவுக்கு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

குறித்த விஜயத்தின்போது, இந்தியாவில் பிரிட்டன் முதலீடுகளை அதிகரிப்பது பற்றியும் எல்லையில் சீனாவின் அத்துமீறல்கள் பற்றியும் அவர் விவாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறிய பின்னர், இந்தோ பசிபிக் பிராந்தியம் குறித்த தனது பாதுகாப்பு மற்றும் வெளியுறவு கொள்கை முன்னுரிமைகளை, பிரிட்டன் இன்று வெளியிட உள்ளது.

இந்நிலையில், போரிஸ் ஜான்சனின் வருகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறன்றமை குறிப்பிடத்தக்கது.