ராகுல் காந்தி ஜெர்மனி பயணம்.
நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 19 வரை நடைபெற உள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி டிசம்பர் 15 முதல் 20 வரை ஜெர்மனிக்கு பயணம் மேற்கொள்ளும் முடிவை பா.ஜ.க.வின் ஷெஸாத் பூனாவாலா கடுமையாக விமர்சித்துள்ளார்.
ராகுல் காந்தி, இந்திய காங்கிரஸின் அயலக அணி ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவும், பெர்லினில் புலம்பெயர்ந்த இந்தியர்களை சந்திக்கவும் செல்வதாக காங்கிரஸ் தரப்பு தெரிவித்துள்ளது
இந்த வெளிநாட்டு பயணத்தை விமர்சித்த ஷெஸாத் பூனாவாலா, ராகுலை "வெளிநாட்டு நாயகன்" மற்றும் "சுற்றுலாத் தலைவர் என்று கிண்டல் செய்தார். நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடக்கும்போதே அவர் வெளிநாடு செல்வதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னதாக, பிகார் தேர்தல் சமயத்திலும் ராகுல் வெளிநாடு சென்றதை நினைவுபடுத்திய பா.ஜ.க. செய்தி தொடர்பாளர், ராகுலின் கடமை உணர்வு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.