முதலாவது இருபதுக்கு 20 போட்டி இன்று

17.11.2021 06:44:58

இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டி இன்று (17) இடம்பெறவுள்ளது.

இந்தப் போட்டி இலங்கை நேரப்படி இன்றிரவு 7 மணிக்கு ஜெய்ப்பூரில் ஆரம்பமாகவுள்ளது.

ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி விளையாடவுள்ளதுடன், விராட் கோலி, ஜஸ்பிரிட் பும்ரா உள்ளிட்ட சில சிரேஷ்ட வீரர்களுக்கு இந்தத் தொடரில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

அதேநேரம் நியூஸிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் இந்தத் தொடரில் பங்கேற்கமாட்டாரென தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவருக்குப் பதிலாக டிம் சவுத்தி நியூஸிலாந்து அணியை வழிநடத்துவாரென எதிர்பார்க்கப்படுகிறது.