அதிரடி மன்னன் ஜோஸ் பட்லர்

01.07.2022 11:25:43

இயான் மோர்கன் ஓய்வு அறிவித்த நிலையில் இங்கிலாந்து அணியின் புதிய கேப்டனாக ஜோஸ் பட்லர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் இயான் மோர்கன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தொடர்ந்து சில போட்டிகளில் சொதப்பியதாலும், உடற்தகுதி பிரச்சனையாலும் அவர் இந்த முடிவை எடுத்ததாக கூறப்பட்டது.

மோர்கனின் திடீர் ஓய்வு அறிவிப்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. இந்த நிலையில், இங்கிலாந்து அணியின் புதிய கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்தது. டெஸ்ட் அணிக்கு பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்டிருந்தார். அவரது தலைமையிலான இங்கிலாந்து அணி நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது.

எனவே அவர் டெஸ்ட் அணிக்கு கேப்டனாக நீடிப்பார் என தெரிகிறது. தற்போது ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தனது அதிரடியான ஆட்டத்தின் மிரட்டி வரும் ஜோஸ் பட்லர், இங்கிலாந்து அணிக்கு புதிய கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு கேப்டனாக செயல்படுவார். கடந்த 2016ஆம் ஆண்டு முதல் முறையாக இங்கிலாந்து அணிக்கு பட்லர் கேப்டனாக செயல்பட்டார்.

அவரது தலைமையில் இங்கிலாந்து 9 போட்டிகளில் 6 வெற்றி, 3 தோல்வி கண்டது. அதேபோல் 2015ஆம் ஆண்டுகளில் அவரது தலையிலான டி20 அணி 5 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 2 தோல்வி கண்டது.