இந்திய அமைச்சருடன், எதிர்க்கட்சி தலைவர் சந்திப்பு.

04.11.2025 13:19:07

எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, இந்தியாவின் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை டெல்லியில் வைத்து செவ்வாய்க்கிழமை (03) அன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதையடுத்து எதிர்கட்சி தலைவர் தனது எக்ஸ் தளத்தில், “கௌரவ நிர்மலா சீதாராமனை சந்திக்கும் பாக்கியம் கிடைத்தது. நமது தேசம் "அனைத்து வளங்களாலும் மனித திறமைகளாலும் ஆசீர்வதிக்கப்பட்டது" என்று இலங்கையை பற்றி அவர் மிகுந்த அன்புடன் பேசினார். அவரது வார்த்தைகள் நமது நிலையைப் பயன்படுத்திக் கொள்வதும், நமது முழு திறனை உணர்ந்து கொள்வதும் நமது பொறுப்பாகும் என்பதை நினைவூட்டுகின்றன. அவரது அன்பான வார்த்தைகளுக்கும் இலங்கைக்கான தொடர்ச்சியான ஆதரவிற்கும் நன்றி. என பதிவிட்டுள்ளார்.