நடுத்தர வருமானம் ஈட்டுவோருக்கு 3000 வீட்டு அலகுகள் ; நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

30.12.2020 17:36:29

நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்களுக்கான மொத்தம் 5000 அலகுகளில் 3000 வீட்டு அலகுகளை நிர்மாணிப்பதற்கான ஆரம்பப் பணிகள் ஏற்கனவே ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அறிவுறுத்தலின் கீழ் தொடங்கப்பட்டுள்ளன.


இத்திட்டத்தின் கட்டுமானப் பணிகளை 2021 ஜனவரி முதல் வாரத்துக்குள் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை (UDA)யின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், ஒரு திட்டவட்டமான விலை இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றாலும், வீடுகள் நியாயமான மதிப்பில் வழங்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும், 30 வருட காலப்பகுதியில் செலுத்த வேண்டிய கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. எவ்வாறாயினும் செலுத்தி முடிக்கும் காலம் விண்ணப்பதாரரின் வயதுடன் வேறுபடலாம். மேலும் 6.2% வட்டி வீதத்தை இது கொண்டிருக்கும் என்று நகர அபிவிருத்தி அதிகார சபையின் பிரதிநிதி மேலும் கூறினார்.