சீனாவில் 3 நாளில் ஓராண்டு மழை!!

31.07.2021 09:09:06

சீனாவின் ஷின்ஜியாங் நகரில் பெய்த கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.


சீனாவின் ஹெனன் மாகாணம், 60 லட்சம் மக்களுக்கு உறைவிடமாக திகழ்கிறது. அங்குள்ள அணைகள் கடந்த வாரம் பெய்த கனமழையால் சேதமடைந்தன. மாகாணத்தின் தலைநகர் ஜெங்ஜோவில் மட்டும் ஓராண்டு காலத்திற்கு பெய்ய வேண்டிய மழை, மூன்றே நாட்களில் கொட்டித் தீர்த்தது. இதனால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி 99 பேர் பலியாகி உள்ளதாக சீன அரசு  அறிவித்தது.


ஜெங்ஜோவில் பெய்த கனமழையால் மக்கள் ரயில் சுரங்கப் பாதைகளிலும் கார்களிலும் தஞ்சம் அடைந்துள்ளனர். 'விவசாயத்தை நம்பியிருக்கும் ஹெனன் மாகாணத்தில் 14 பில்லியன் டாலர்கள் மதிப்பில் இழப்பு ஏற்பட்டிருக்கலாம்' என, பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.