பௌத்த மதத்தை அவமதித்த “விஸ்வ புத்தா”விற்கு பிணை!

09.01.2024 16:32:21

பௌத்த மதத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரத்தினபுரியின் விஸ்வ புத்தா என்பவரை பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதிவான் பிரசன்ன அல்விஸ் இன்று (செவ்வாய்க்கிழமை) உத்தரவிட்டுள்ளார்.

 

சந்தேக நபருக்கு எதிராக சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சாசனத்தின் கீழ் குற்றச்சாட்டை சுமத்த முடியாது என நீதிவான் தீர்ப்பளித்தார்.

இதன்படி தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்ட நீதவான், முறைப்பாட்டை மார்ச் 27ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறும் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.