சைபர் குற்றங்கள் பட்டியலில் 10வது இடத்தில் இந்தியா

12.04.2024 07:41:19

இணையவழிக் குற்றங்கள் அதிகம் நடைபெறும் நாடுகளில் இந்தியா 10வது இடத்தில் உள்ளது. உலகில் உள்ள 100 நாடுகளில் சைபர் கிரைம் அதாவது இணையம் மூலம் நடைபெறும் குற்றங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இதன் மூலம் உலக இணையக் குற்ற குறியீடு என்ற ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியா 10வது இடத்தில் உள்ளது.

இந்தியாவில் இணையவழியில் முன்பணம் செலுத்தினால் அதிகப் பணம் அல்லது பரிசு கிடைக்கும் என்ற மோசடி அதிகளவில் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல பல்வேறு நாடுகளில் வெவ்வேறு வழிகளில் சைபர் குற்றங்கள் நடைபெறுகின்றன. அதன்படி அதிக சைபர் குற்றங்கள் நடைபெறும் நாடுகளில் முதலிடத்தில் ரஷ்யாவும், 2வது இடத்தில் உக்ரைனும், 3வது இடத்தில் சீனாவும் உள்ளன. இதனை தொடர்ந்து அமெரிக்கா, நைஜீரியா, ருமேனியா, வடகொரியா, பிரிட்டன், பிரேசில் ஆகியவை 4 முதல் 9 இடங்களில் உள்ளன.