வேலணையில் இரு கடற்றொழில் பண்ணைகள்

11.08.2021 14:37:56

வேலணையில் இரண்டு பண்ணை வளர்ப்புத் திட்டங்களுக்கான பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ன.

அதனடிப்படையில், அன்னை குழுமம் எனும் தனியார் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் நவீன இறால் வளர்ப்பு பண்ணைக்கான வேலைகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார்.

குறித்த நிகழ்வு இன்று(11) வேலணை வடகிழக்கு ஜே/13 கிராம உத்தியோகத்தர் பிரிவில் அன்னை குழுமத்தின் பண்ணைக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் நடைபெற்றது.