ஐ.நாவிலிருந்து அரசுக்கு சவால் விடுத்த அர்ச்சுனா எம்.பி.

08.10.2025 09:04:21

தனது தந்தை கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் ஐ.நாவில் முறைப்பாடொன்றை முன்வைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் (Ramanathan Archchuna) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “எனது தந்தை கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் கிட்டத்தட்ட ஐந்து மணித்தியால முறைப்பாட்டொன்றை நான் ஐ.நாவில் முன்வைத்துள்ளேன்.

இந்த குற்றச்சாட்டை இலங்கை இராணுவத்திற்கு எதிராக நான் முன்வைத்துள்ளேன்.

நாட்டிற்கு வந்தவுடன் என்னை சுட்டாலும் பரவாயில்லை, கொலை செய்தாலும் பரவாயில்லை மற்றும் கொன்று புதைத்தாலும் பரவாயில்லை.

என்னை போல வேறு எந்த நாடாளுமன்ற உறுப்பினரும் உண்மைகளை இங்கு முன்வைக்கவில்லை, அனைவரும் மக்களை விற்றவர்களே” என அவர் தெரிவித்துள்ளார்.