ரஷ்யாவில் தொடர் நிலநடுக்கம்.

21.07.2025 07:46:14

ரஷ்யாவின் கம்சாட்கா கடற்கரைக்கு அருகே ஒரே மணிநேரத்தில் 5 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இதில் மிகப்பெரியதாக இருந்தது 7.4 ரிக்டர் அளவில் பதிவானது, இது பசிபிக் பெருங்கடலில், பெட்ரோபவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கி நகரிலிருந்து 144 கிலோமீட்டர் தொலைவில் Sunday காலை 8:49 (GMT) மணிக்கு பதிவானது. இந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு, அமெரிக்க தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் ரஷ்யாவின் கிழக்கு கடற்கரை பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

300 கிமீ வரை சுனாமி அலைகள் ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாக எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

நிலநடுக்க விவரங்கள்: Petropavlovsk-Kamchatsky-யில் இருந்து கிழக்கே

6.6 ரிக்டர் - 147 கிமீ கிழக்கே

6.7 ரிக்டர் - 151 கிமீ கிழக்கே

7.4 ரிக்டர் - 144 கிமீ கிழக்கே

6.7 ரிக்டர் - 130 கிமீ கிழக்கே

7.0 ரிக்டர் - 142 கிமீ கிழக்கே

இதில் 7.4 ரிக்டர் நிலநடுக்கம் மட்டுமே சுனாமி அபாயத்தை தூண்டியுள்ளது. அதே நேரத்தில் ஹவாய் மாநிலத்திற்கும் சுனாமி வாட்ச் விடுக்கப்பட்டது, ஆனால் பின்னர் அது ரத்து செய்யப்பட்டது.

தற்போது வரை, பெரிதான சேதமோ, உயிரிழப்புகளோ எதுவும் பதிவாகவில்லை. ஆனால், அதிகாரிகள் நிலைமையை கவனமாக கண்காணித்து வருகின்றனர்.