யாழ்ப்பாணத்தில் சமய வழிபாடுகளில் ஈடுபட்ட நடிகை ரம்பா குடும்பத்தினர்

14.12.2023 05:00:00

தென்னிந்திய தமிழ் நடிகை ரம்பா யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து தனது குடும்பத்துடன் மானிப்பாய் மருதடி பிள்ளையார் கோயிலில் விசேட வழிபாடுகளில் ஈடுபட்டார்.

நடிகை ரம்பாவின் கணவர் இந்திரகுமார் பத்மநாதன் யாழ்ப்பாணம் மானிப்பாயை பூர்வீகமாக கொண்ட கனடா முதலீட்டாளராவார்.

இவரின் முயற்சியாக யாழ்ப்பாணத்தில் நோர்த்தன் யுனி (Northern uni) தனியார் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
 

நோர்த்தன் யுனியின் அனுசரனையில் எதிர்வரும் டிசம்பர் 21ஆம் திகதி யாழ்ப்பாணம் முற்றவெளியில் தென்னிந்திய பாடகர் ஹரிஹரன் பங்கேற்கவுள்ள பிரம்மாண்டமான இலவச இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.