அதியுச்ச பாதுகாப்பு வழங்குக

19.08.2022 10:13:01

கோட்டாபய

கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பாக நாடு திரும்பவும், அவருக்குத் தேவையான பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகளையும் செய்து கொடுக்குமாறும் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றிரவு நடைபெற்றது.

கோட்டாபயவுக்கு தேவையான பாதுகாப்பு  

சர்வகட்சி அரசு உட்பட அடுத்தகட்ட வேலைத்திட்டங்கள் சம்பந்தமாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

அத்துடன், கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பியதும், முன்னாள் அதிபர் என்ற வகையில் அவருக்கு தேவையான பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்துகொடுக்கப்பட வேண்டும் என இதன்போது வலியுறுத்தப்பட்டது.

குறித்த சந்திப்பின் போது பசில் ராஜபக்ச, சாகர காரியவசம் உட்பட மொட்டுக் கட்சியின் பிரமுகர்கள் பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.