அமைச்சர்களுக்கு விஜய் அதிரடி உத்தரவு.

27.08.2026 13:50:02

நேற்று நேபாளத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 500-க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்து விட்டதாக சொல்லப்படுகிறது. பல கட்டிடங்கள், வீடுகள், வாகனங்கள் நீரில் அடித்து செல்லப்பட்டன. அதேபோல் வெள்ளத்திலும் பல மனிதர்களும் சிக்கினார்கள். அவர்களில் பலரும் உயிரிழந்தனர்..
 

இறந்து போன உடல்கள் கரையோரமாய் ஒதுங்க அவற்றை மீட்பு படையினர் மீட்டு வருகிறார்கள். ஒருபக்கம் தமிழகத்திலிருந்து நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற பலரும் மாயமாகியிருக்கிறார்கள். கும்பகோணத்திலிருந்து சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் அங்கு சென்றுள்ளனர். ஆனால் அவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை

இந்நிலையில்தான், நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் அதிகாரியுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது மீட்பு நிவாரண பணிகளை டெல்லியிலிருருந்து அமைச்சர்கள் ஒருங்கிணைக்குமாறு அவர் அறிவுறுத்தினார்.

மேலும் ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் நேபாளம் செல்லவும் அவர் உத்தரவிட்டிருக்கிறார். டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல ஆணையர் ஆஷிஷ் குமார் தலைமையிலான அதிகாரிகள் காட்மாண்டு செல்லமாறும் அவர் உத்தரவிட்டிருக்கிறார். காட்மாண்டு செல்லும் அதிகாரிகள் குழு அந்நாட்டு அதிகாரிகளோடு மீட்டுப் பணியை ஒருங்கிணைப்பார்கள் என தெரிகிறது. மேலும் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், வினோத் ஆகியோரை டெல்லி சென்று மீட்பு பணிகளை ஒருங்கிணைக்குமாறும் முதல்வர் விஜய் உத்தரவிட்டிருக்கிறார்.