பங்களாதேஷ் செல்கிறது இலங்கை அணி !
06.05.2021 10:04:15
ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கெடுப்பதற்காக இலங்கை அணி பங்களாதேசுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் மே 16ஆம் திகதி டாக்காவுக்குச் செல்லும் இலங்கை அணி சில நாட்கள் தனிமைப்படுத்தலுக்குப் பின்னர் மே 21ஆம் திகதி பயிற்சிப் போட்டிகளில் பங்கெடுக்கவுள்ளது.
இதையடுத்து, மே 23, 25 மற்றும் 28 ஆகிய திகதிகளில் மீர்பூரில் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் விளையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.