புகைப்பிடிப்பவர்கள் கொவிட் காரணமாக மரணிக்க அதிக வாய்ப்பு

28.08.2021 07:00:00

புகைப்பிடிப்பவர்கள் கொவிட் காரணமாக மரணிக்க அதிக வாய்ப்புள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

புகைபிடித்தல் நுரையீரலின் செயல்பாட்டை பலவீனப்படுத்துகிறது என்று கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் தீபால் பெரேரா கூறினார்.

மேலும், சிகரெட், சுருட்டு அல்லது வேறு வேறு வகையில் புகைப்பிடிப்பவர்களின் நுரையீரல் செயல்பாடு பலவீனம் அடைவதாகவும் விசேட வைத்தியர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறானவர்களுக்கு கொவிட் தொற்று ஏற்படுவதனால், மிக விரைவாக கொவிட் நிமோனியா நிலை ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.