இலங்கையில் ஆபத்தாக மாறும் பயணங்கள்!

16.06.2022 05:55:18

இலங்கையில் எரிபொருள் நெருக்கடியால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டின் பல பகுதிகளில் இன்று காலை ஆபத்தான ரயில் பயணங்களில் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

பேருந்துகளுக்கு எரிபொருள் கிடைக்காமையினால் 80 சதவீதமான தனியார் பேருந்துகள் தமது சேவைகளை நிறுத்தியுள்ளது.

இந்த நிலையில் அலுவலகம் செல்லும் மக்கள் ரயில்களிலேயே தங்கள் பயணத்தை மேற்கொள்கின்றார்கள்.

இதனால் ரயில்களில் இடமில்லாமல் மக்கள் ரயில்களுக்கு மேல் அமர்ந்து ஆபத்தான பயணங்களை மேற்கொள்கின்றார்கள்.

இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.