சென்னையில் 6வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை!

24.11.2024 08:35:11

சென்னையில் வருமான வரித்துறை அதிகாரிகள் 6வது நாளாக இன்றும் சோதனை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் உள்ள பாலிஹோல் நிறுவனத்திற்குச் சொந்தமான இடங்களில் 6வது நாளாக இன்றும் (24.11.2024) வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

   

கிண்டியில் உள்ள பாலிஹோல் நிறுவனத்தின் கார்ப்பரெட் தலைமை அலுவலகத்தில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. அதோடு அபிராமபுரத்தில் உள்ள இந்நிறுவனத்தின் இயக்குநர் யூசூப் சபீர் வீட்டிலும், பெசன்ட் நகரில் உள்ள அவரது மற்றொரு வீட்டிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து 6வது நாளாக சோதனையில் ஈடுபட்டுள்ளது அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின் பேரில் இந்த சோதனையானது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.