நேபாளத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 28 பேர் பலி

13.10.2021 05:39:51

நேபாளத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 28 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், இந்த விபத்தினால் பெரும்பாலானோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நேபாளத்தின் முகு மாவட்டத்தில், நேற்று பயணித்த குறித்த பேருந்து வீதியை விட்டு விலகிச் சென்று விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

இதன்போது காயமடைந்த பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும், இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.