இட்லி கடையின் வசூல் நிலவரம்'.

06.10.2025 08:11:49

தனுஷ் இயக்கி நடித்து கடந்த ஒன்றாம் தேதி திரைக்கு வந்த படம் இட்லி கடை. இந்த படத்தில் அவருடன் நித்யா மேனன், அருண் விஜய், ஷாலினி பாண்டே, பார்த்திபன், ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். 

பாசிட்டிவ் விமர்சனங்களை இந்த படம் பெற்று வந்த போதும் எதிர்பார்த்தபடி தியேட்டர்களில் வசூல் இல்லை என்று கூறப்படுகிறது. 

அந்த வகையில் கடந்த மூன்று நாட்களில் இட்லி கடை படம் 38 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இதேவேளை ஒக்டோபர் இரண்டாம் திகதி திரைக்கு வந்த படம் காந்தாரா சாப்டர்-1. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள இந்த படத்தில் ருக்மணி வசந்த் நாயகியாக நடித்திருக்கிறார். 

ரசிகர்கள் மத்தியில் நல்லவிதமான விமர்சனங்களை பெற்று வரும் இந்த படம் கடந்த இரண்டு நாட்களில் 150 கோடி வரை வசூலித்திருப்பதாக பொக்ஸ் ஒபீஸ் தகவல் தெரிவிக்கின்றன