சட்டவிரோத வெடிபொருட்களுடன் நிலாவெளியில் ஒருவர் கைது 

26.09.2021 04:35:12

நிலாவெளி பிரதேசத்தில் சட்டவிரோதமாகக் கொண்டு செல்லப்பட்ட வெடிப்பொருட்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடற்படையினரும், நிலாவெளி காவல்துறையினரும் இணைந்து முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின்போது குறித்த நபர் கைது செய்யப்பட்டதாகக் கடற்படையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் முச்சக்கரவண்டியில் வோட்டர் ஜெல் எனப்படும் 27 வெடிப்பொருட்களையும், 500 டெட்டனேட்டர்களையும் கொண்டு சென்றுள்ளார்.

இந்நிலையில் குறித்த முச்சக்ககர வண்டியை சோதனையிட்ட போது வெடிப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நிலாவெளி பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதான சந்தேக நபருடன், அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட வெடிப்பொருட்களும் மேலதிக விசாரணைகளுக்காக நிலாவெளி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகக் கடற்படையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.