சக இராணுவ வீரர் உட்பட 4 பேரை சுட்டுக்கொன்ற ரஷ்யர்!
|
இணைக்கப்பட்ட கிரிமியாவில் சக இராணுவ வீரர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய ரஷ்ய வீரர் கைது செய்யப்பட்டார். இணைக்கப்பட்ட கிரிமியாவில், ரஷ்ய இராணுவ வீரர் சக வீரர் மற்றும் பொதுமக்கள் 3 பேர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் தாக்குதலுக்கு உள்ளான நான்கு பேருமே உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து குறித்த இராணுவ வீரர் கைது செய்யப்பட்டதாக ஆளுநர் தெரிவித்தார். செவாஸ்டோபோலின் ஆளுநரான மிகைல் ரஸ்வோஷா யேவ், Khmelnitskoye கிராமத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். |
|
அவர்களில் 71, 64 மற்றும் 59 வயதுடைய பொதுமக்கள் மற்றும் ஒரு இராணுவ வீரர் ஆகியோர் அடங்கும் என்றார். மேலும் அந்த இராணுவ வீரரின் துப்பாக்கிச்சூட்டில் ஒரு இராணுவ வீரர் உட்பட மேலும் நான்கு பேர் காயமடைந்தனர். மருத்துவப் பணியாளர்கள் அவர்களைக் காப்பாற்ற முடிந்தவரை போராடி வருகின்றனர் எனவும், தாக்குதல் நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார். |