பல்கலைக்கழகங்களை திறப்பது குறித்து இன்று கலந்துரையாடல்
22.10.2021 06:24:56
நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழகங்களை மீண்டும் திறப்பது தொடர்பான சிறப்பு கலந்துரையாடல் இன்று நடைபெற உள்ளது.
இந்த கலந்துரையாடல் இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் நடைபெறும்.
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பேச்சுவார்த்தையில் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதன்போது பல்கலைக்கழக மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படவுள்ளது.
ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் தடுப்பூசி போடப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை பற்றிய அறிக்கைகள் பரிசீலிக்கப்பட உள்ளதாகவும் இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.