மட்டக்களப்பிற்கு சிறப்பான ஆண்டாக அமையும்!

18.06.2024 08:18:38

உலக வங்கியின் ஊடாக கிடைக்கப்பெற்றிருக்கின்ற விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊழலும் பிரச்சினைகளும் வந்திருப்பதாக  உறுதிப்படுத்தக் கூடிய தகவல்கள் கிடைக்க பட்டிருக்கின்றது என இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி பங்களிப்பில் மன்முனை பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளவர்களுக்கான வாழ்வாதார பொருட்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று மாலை மண்முணை பற்று பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.

மண்முணைப் பற்று பிரதேச செயலக பிரிவிற்கு 11 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 7.5 மில்லியன் ரூபா நிதி மலசல கூடங்கள் அமைத்துக் கொடுப்பதற்கும் 3.5 மில்லியன் ரூபா நிதி மீனவர்களுக்கான வாழ்வாதார உதவிகள், சமூக அமைப்புக்களுக்கான உபகரணங்கள், பாடசாலைகளுக்கான விளையாட்டு மற்றும் பேண்ட் வாத்திய கருவிகள் அத்தோடு உள்ளூர் விளையாட்டு கழகங்களுக்கான விளையாட்டு பொருட்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன், மண்முணை பற்று பிரதேச செயலாளர் தட்சனா கௌரி தினேஸ், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பிரசாந்தன் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் பிரதேச செயலக ஊழியர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இராஜாங்க அமைச்சர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு தெரிவிக்கையில்,

2022 ஆம் ஆண்டு மிகவும் ஒரு மோசமான ஆண்டாக காணப்பட்டது அதனோடு ஒப்பிடுகின்ற போது 2023 ஆம் ஆண்டு ஓரளவு மாற்றத்திற்கு வந்தது. 2024 ஆம் ஆண்டு ஓரளவு முன்னோரிய ஒரு நாட்டிலே நாங்கள் வாழக்கூடிய சூழலில் ஏற்பட்டிருக்கின்றது.

மலசல கூடங்களுக்கு நிதிய ஒதுக்குவது என்பது ஒரு நல்ல ஒரு விடயமாக நான் பார்க்கின்றேன் இது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஒரு பெரிய பிரச்சனை சில இடங்களுக்கு செல்லுகின்ற போது இதற்கெல்லாம் எவ்வாறு தீர்வு கொடுப்பது என்பது தெரியாது ஏனென்றால் ஆயிரக்கணக்கான விளிம்பு நிலை மக்கள் இன்னமும் மிக மோசமான சுகாதார நடைமுறைகளில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் தங்களுடைய நாளாந்த மலசல கூட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் கஷ்டப்படுகின்ற கடந்த காலங்களை போன்று மறைவிடங்கள் கூட இல்லாத நிலையில் மிக துன்பப்படுகின்ற போது கவலை இருக்கின்றது.

அதற்கு பலவிதமான திட்டங்களை அமுலாக்க வேண்டிய தேவைப்பாடுகளும் எழுந்திருக்கின்றது ஆனால் சில முயற்சிகள் எடுத்தும் அதில் தோற்றும் இருக்கின்றோம் இருந்தாலும் இதில் ஒரு குறுகிய சொற்பமானவர்களுக்கேனும் மன்னனைப் பற்றி சில கூட்டங்களை ஒதுக்குவது வரவேற்கத்தக்க விடயமாக காணப்படுகின்றது.

நாங்கள் ஒரு வளர்ச்சி அடைந்த நாடாக வர வேண்டுமாக இருந்தால் அனைவருக்கும் இந்த திட்டங்களை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் அதற்கும் எதிர்காலம் நல்ல வழிகளை காட்டும் என நம்புகின்றேன்.

இந்த வருடமானது 2011, 2012 இல் அதை மிஞ்சுகின்ற அளவில் மட்டக்களப்பு மாவட்டத்தின் புள்ளி விவரங்களின் அடிப்படையில் நமது மாவட்ட வரலாற்றிலே 2011 2012 ஆகிய ஆண்டுகளிலே அதிக நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கப்பெற்று இருக்கிறது அதேபோன்று ஒரு ஆண்டாக தான் 2024 ஆம் ஆண்டு அமைந்திருக்கின்றது.

ஏனென்றால் வீதி அபிவிருத்திக்கு மாத்திரம் பல பில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டிருக்கின்றது. நல்லாட்சிக் காலத்தில் பாதை அபிவிருத்திக்காக 6 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது ஆனால் அதில் பத்திரிகையில் வந்தது அமைச்சரவையின் அங்கீகாரம் கூட பெற்றிருந்தது ஒரு பாலத்திற்கு அடிக்கல் நாட்டில் ஆரம்பித்து வைத்தார்கள் இன்னமும் அந்த பாலம் வேலை இடம்பெறவில்லை.

அவ்வாறு இல்லாமல் ஒரு பொறுப்பிற்கு அரசியல் பிரதிநிதி என்கின்ற வகையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வந்திருக்கின்ற அனைத்து விதமான நிதியினையும் சரியாக பயன்படுத்தி இருக்கின்றோம்.

எமக்கு சிக்கலாக இருப்பது உலக வங்கியின் ஊடாக கிடைக்கப்பெற்றிருக்கின்ற விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தில் மாத்திரம் தான் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊழலும் பிரச்சினைகளும் வந்திருப்பதாக மக்கள் மத்தியில் அதேபோன்று உறுதிப்படுத்தக் கூடிய தகவல்கள் கிடைக்க பட்டிருக்கின்றது.

அதேபோன்று விவசாய மேம்பாட்டில் நீர்ப்பாசனம் என்பது மிக முக்கியமானது அந்த நீர்ப்பாசன திட்டத்திற்கும் வழமை போல வன இலாகா அதேபோன்று காடுகளில் ஏற்படுகின்ற சில விடயங்கள் காரணமாக சில பின்னடைவுகள் ஏற்பட்டிருக்கின்றது அவற்றையும் நான் நம்புகின்றேன் ஜனாதிபதி மட்டத்திற்கு கொண்டு சென்றிருக்கின்றோம் விரைவாக தீர்வுகள் கிடைக்கப்பெறும்.

நாட்டில் உற்பத்தி துறை அதிகாரித்து வேலை வாய்ப்புகளை வழங்குகின்ற அச்சத்தை போக்குகிற ஆண்டாக 2025 ஆம் ஆண்டு அமைய வேண்டும் என தெரிவித்தார்.