அஜித்தை முன்னுதாரணமாக வைத்து அறிவுரை கூறிய போலீஸ்

02.08.2023 12:51:53

நடிகர் அஜித் மகிழ்திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடிக்கிறார். இவர் தற்போது மீண்டும் தனது பைக் பயணத்தை தொடங்கியுள்ளார். அமராவதி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் அஜித். அதன்பின்னர் ஆசை, காதல் கோட்டை, காதல் மன்னன், அமர்களம், முகவரி, தீனா, பில்லா, என்னை அறிந்தால், வீரம், நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட பல படங்களில் நடித்து திரையுலகில் தனக்கான இடத்தை பிடித்தார். சமீபத்தில் எச்.வினோத் இயக்கத்தில் வெளியான துணிவு படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

தற்போது அஜித், மகிழ்திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடிக்கிறார். அவ்வப்போது உலகம் முழுவதும் பைக் பயணம் செல்லும் அஜித், தற்போது மீண்டும் தனது பைக் பயணத்தை தொடங்கியுள்ளார். அஜித்தின் பைக் பயணித்தின் போது எடுக்கப்பட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஸ்டாலின் ஐ.பி.எஸ் பகிர்ந்த புகைப்படம் இந்நிலையில், அஜித்தின் இந்த புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து ஸ்டாலின் ஐ.பி.எஸ் மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். அந்த பதிவில், "பைக்கில் செல்லும் பொழுது தலைக்கவசம் அணிந்து பாதுகாப்பாக செல்லுங்கள்...தலைக்கவசம் உயிர்க்கவசம்" என்று குறிப்பிட்டுள்ளார்.