ஹங்கேரியில் ஊழலை ஒழிக்க புதிய சட்டம்.
ஹங்கேரியின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள பீட்டர் மக்யார். நாட்டில் கடந்த 20 ஆண்டுகளாக அரசு நிர்வாகத்தில் நடந்துள்ள பண மோசடிகள் மற்றும் ஊழலை ஒழிக்க அதிரடி சட்டத்திருத்தங்களை பாராளுமன்றத்தில் முன்மொழிந்துள்ளார். முன்னாள் பிரதமர் விக்டர் அர்பனின் ஆதரவாளரான தற்போதைய ஜனாதிபதி தோமாஸ் சுல்யோக்கை பதவியிலிருந்து நீக்க அவர் முடிவு செய்துள்ளார்.
ஊழல் காரணமாக நாட்டின் பொருளாதாரம் 10 சதவீதம் வரை பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள பிரதமர், இதற்காக 47 சட்டங்களைத் திருத்தி, 'தேசிய சொத்து பாதுகாப்பு மற்றும் மீட்பு அலுவலகம்' என்ற புதிய விசாரணை அமைப்பை உருவாக்கவுள்ளார்.
மேலும், நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை 70 ஆக மாற்றவும், எம்.பி.க்களின் பதவிக்காலத்தை 12 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஹங்கேரி பிரதமரின் இந்த அதிரடி நடவடிக்கைகள் அந்நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.