பாண், பணிஸ் விலைகள் அதிகரிப்பு!

31.10.2026 12:36:55

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 450 கிராம் நிறையுடைய பாண் ஒன்றின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இந்த விடயத்தை அறிவித்துள்ளது. ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலைகளும் 5 ரூபாயினால் அதிகரிக்கப்படுவதாக அதன் தலைவர் என். கே. ஜெயவர்தன தெரிவித்தார்.