கொங்கோவில் படகுகள் விபத்து- 100-க்கு மேற்பட்டோர் பலி

10.10.2021 10:08:48

மத்திய ஆப்பிரிக்க நாடான கொங்கோவில் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்ட 9 படகுகள் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 100-க்கு மேற்பட்டோர்  உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த விபத்தில் ஆற்றில் மூழ்கி காணாமல் போனவர்களை தேடும் பணியின்போது நேற்றுவரை 51 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 69 பேர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது. அதேநேரம் மூழ்கிய படகுகளில் இருந்த 39 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக கொங்கோ ஜனநாயக குடியரசின் அதிகாரிகள் நேற்று சனிக்கிழமை தெரிவித்திருந்தனர்.

இதேவேளை, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாளை திங்கள்கிழமை முதல் மூன்று நாட்கள் மங்கலா மாகாணத்தில் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என மாகாண அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.