டெல்லி மற்றும் அரியானா மாநிலம் ஆகிய பகுதிகளில் உணரப்பட்ட நிலநடுக்கங்களால் அச்சத்தில் மக்கள் !

06.07.2021 08:53:42

 

தலைநர் டெல்லி மற்றும் அரியானா மாநிலம் ஆகிய பகுதிகளில் உணரப்பட்ட நிலநடுக்கங்களால் மக்கள் அச்சத்தில் உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அரியானா மாநிலத்தில் நேற்று இரவு ஜஜ்ஜார் பகுதியில் நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. இது 3.7 என்ற ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.
அதேபோல் டெல்லியிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் இதனால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த விபரங்கள் வெளியாகவில்லை.

அதேவேளை இந்தியாவின் வட பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.