"விஜய் போல் தனுஷும் நம்புகிறார்".
|
நடிகர் தனுஷின் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார். நடிகர் தனுஷ் தனிக்கட்சி தொடங்கி அரசியலில் இறங்கும் முயற்சியில் உள்ளதாக கூறப்படுகிறது. ரசிகர்கள் மன்றத்தை சட்டமன்ற தொகுதி வாரியாக பிரித்ததோடு, நற்பணி இயக்கமாக மாற்றியது, டெல்லியில் முக்கிய பிரமுகர்களுடன் ஆலோசனை, ,மகளிரணி நிர்வாகிகளுடன் சந்திப்பு என பணியை தீவிரப்படுத்தி வருகிறார். |
|
தனுஷின் அரசியல் வருகை தொடர்பான கேள்விகளுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், "இந்தியா ஒரு மிகப்பெரிய ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். கட்சி தொடங்குவதை எப்படி தவறு என்று சொல்ல முடியும். திரைப்படங்களில் நடித்து கொண்டிருக்கிறார். ரசிகர்கள் இருக்கிறார்கள், எப்படி விஜய்க்கு ஜாக்பாட் அடித்ததோ, அதுபோல் தனக்கும் ஜாக்பாட் அடிக்கும் என தனுஷ் நம்புகிறார். அதனால் ஒருவரை குறை சொல்வது பொருத்தமாக இருக்காது" என தெரிவித்துள்ளார். |