ஜெர்ட் முல்லர் காலமானார்
17.08.2021 08:31:38
ஜெர்மனி கால்பந்து நட்சத்திரம் ஜெர்ட் முல்லர் (75 வயது) நேற்று காலமானார். மேற்கு ஜெர்மனி அணிக்காக 62 சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ள முல்லர் அவற்றில் 68 கோல் அடித்துள்ளார்.
1974 உலக கோப்பை பைனலில் நெதர்லாந்து அணிக்கு எதிராக வெற்றி கோல் அடித்து புகழ் பெற்றவர். ஜெர்மனியின் பிரபல கால்பந்து கிளப் பயர்ன் மியூனிக் சார்பில் 427 போட்டிகளில் விளையாடி 365 கோல் போட்டு அசத்தியுள்ளார்.
ஓய்வு பெற்ற பிறகு பயிற்சியாளராகவும் நிர்வாகியாகவும் செயல்பட்டு முத்திரை பதித்த முல்லரின் மறைவுக்கு கால்பந்து பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.