தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நேரில் சென்று முதலமைச்சர் ஆய்வு

29.05.2021 09:55:40

கோவையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் வைரஸ் தொற்றினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள்  மற்றும் சிகிச்சைக்கான ஏற்பாடுகள் தொடர்பாக  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்.

கோவையில் நேற்று மாத்திரம் 3 ஆயிரத்து 937 பேர், கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தொற்று பாதிப்பில் மாநில அளவில் அவதானிக்கும்போது  கோவையே முதலிடத்தித்தில் உள்ளது.

இந்நிலையிலேயே கோவையின் நிலைவரம் குறித்து நாளை ஆராய்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று மாலை சென்னையில் இருந்து விமானம் ஊடாக அங்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.