
தாய்லாந்து முன்னாள் பிரதமர் விடுதலை!
22.08.2025 15:09:09
தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தாக்சின் ஷினவத்ரா (Thaksin Shinawatra) வெள்ளிக்கிழமை (22) அரச குடும்ப அவதூறு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இது அவரது நீண்டகால ஆதிக்க அரசியல் குடும்பத்திற்கு அச்சுறுத்தலைத் தணித்தது.
76 வயதான தலைவர் நாட்டின் கடுமையான லெஸ்-மஜஸ்டே சட்டத்தின் கீழ் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையை எதிர்கொண்டிருந்தார்.
அதன்படி மன்னர் மற்றும் அரச குடும்பத்தினரை விமர்சிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் பேக்கொக் நீதிமன்றம் தாக்சினுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்கள் போதுமானதாக இல்லை என்று தீர்ப்பளித்து குறித்த வழக்கினை தள்ளுபடி செய்தது.
2015 ஆம் ஆண்டு தென் கொரிய செய்தித்தாள் சோசுன் இல்போவுக்கு அளித்த பேட்டியின் போது தாக்சின் முடியாட்சியை அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.