
ஜேர்மனியில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் சோகம்
ஜேர்மனியில் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது 5 பேர் வரை உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது ஏற்பட்ட வானவேடிக்கை விபத்துகளில் 5 பேர் வரை உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர். இதில் மேலும், 13 சட்ட அமலாக்க அதிகாரிகள் காயமடைந்துள்ளனர், இவர்களில் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. |
அத்துடன் புத்தாண்டு தின இரவில் பெர்லின் முழுவதும் 330 பேர் கைது செய்யப்பட்டனர். இருப்பினும், இந்தாண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது பெரிய அளவிலான வன்முறை சம்பவங்கள் பதிவு செய்யவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது. புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது பரவலான வானவேடிக்கை காட்சிகள் பலருக்கும் மகிழ்ச்சியூட்டும் வழக்கமாக இருந்தாலும், அதிலுள்ள வெடிப்பொருள்களின் ஆபத்துகள் ஒவ்வொரு ஆண்டும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் சக்தி வாய்ந்த வெடிபொருட்களின் ஆபத்துகள் குறித்த விவாதத்தை இது தூண்டியுள்ளது. அதுமட்டுமின்றி சுற்றுச்சூழல் மாசு மற்றும் ஒலி மாசுபாடு ஆகியவற்றிக்கு கடுமையான விதிமுறைகள் அல்லது மிகவும் சக்தி வாய்ந்த வானவேடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலுத்து வருகின்றன. |