பிணையில் இருப்பவர் அமைச்சரவையில் இருப்பதா?
|
150 ரூபாய்க்கு ஒரு பாண் வாங்குவதையும், நிலக்கரி கொள்வனவுக்கான விலைமனு நடைமுறைகளையும் ஒன்றாகக் கருத முடியாது எனத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் அரசாங்கத்தின் நடவடிக்கைகளைக் கடுமையாக விமர்சித்துள்ளார். |
|
பாண் வாங்குவதற்கு யாரும் விலைமனு கோருவதில்லை என்றும், அது ஒரு மிகச் சிறிய விடயம் என்றும் குறிப்பிட்ட அவர், தொழில்நுட்ப ரீதியான சிக்கலான ஒரு கொள்வனவு நடைமுறையை அரசாங்கம் இவ்வளவு எளிதாகக் கையாள்வதைச் சுட்டிக்காட்டினார். அத்துடன், ஏற்கனவே கறுப்புப் பட்டியலில் வைக்கப்பட்ட ஒரு நிறுவனம் விலைமனு கோரல் அடிப்படையில் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது எனக் கேள்வி எழுப்பிய அவர், அந்த குறிப்பிட்ட நிறுவனத்திற்காக அரசாங்கம் விலைமனு நடைமுறைகளையே மாற்றியமைத்துள்ளதாகப் பகிரங்கமாகக் குற்றம் சுமத்தினார். இதேவேளை, நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, தற்போது பிணையில் வெளியே இருக்கும் ஒருவர் அமைச்சரவையில் அங்கம் வகிக்கின்றார் எனவும் தெரிவித்தார். இவ்வாறான பின்னணியைக் கொண்டவர்கள் அரசாங்கத்தில் இருக்கும்போது, இனிமேல் எதிர்க்கட்சியினரைப் பார்த்து "திருடர்கள் கூட்டம்" என்று சொல்ல வேண்டாம் என அவர் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்தார். பிணையில் இருப்பவர் அமைச்சரவையில் இருப்பதே அரசாங்கத்தின் இலட்சணத்தைக் காட்டப் போதுமானது எனவும் அவர் தனது மேலும் சுட்டிக்காட்டினார். |