அப்டேட் கொடுத்த ரஜினிகாந்த்..

08.08.2022 10:32:24

ரஜினியின் 169-வது திரைப்படமான ஜெயிலர் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். இப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 169-வது படம் ஜெயிலர். இதில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும்,ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதையடுத்து சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் டெல்லி சென்றிருந்தார். ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பிற்கான சில பணிகளை ரஜினியே நேரில் பார்வையிட இருக்கிறார் என்றும் சில நாட்கள் அங்கேயே தங்கி படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை ஆளுநர் மாளிகையில் இன்று சந்தித்தார். அதன்பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு வரும் 12-ஆம் தேதி அல்லது 22-ஆம் தேதி நடைபெறும்" என கூறினார். இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடக்கவுள்ளதாகவும், அதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.