புலம்பெயர்தல் தொடர்பில் பேச்சு

01.04.2025 08:31:12

சட்டவிரோத புலம்பெயர்தல் எனக்குக் கோபத்தை ஏற்படுத்துகிறது என்று கூறியுள்ளார் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்.

கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான லேபர் அரசு பிரித்தானியாவில் பொறுப்பேற்றபிறகு, 29,884 புலம்பெயர்வோர், 542 சிறு படகுகள் மூலம் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவை அடைந்துள்ளார்கள். 

இந்நிலையில், புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துதல் தொடர்பிலான உச்சி மாநாடு ஒன்றில் உரையாற்றினார் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்.

40 நாடுகளின் தலைவர்கள் அந்த மாநாட்டில் கலந்துகொண்டார்கள்.  

மாநாட்டில் உரையாற்றிய ஸ்டார்மர், தொடர்ந்து ஆங்கிலக்கால்வாயைக் கடக்கும் புலம்பெயர்வோரின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது, தனக்கு கோபம் வருவதாக தெரிவித்துள்ளார். 

புலம்பெயர்ந்தோரை நாடுகடத்துதல் லேபர் அரசின் கீழ் வேகமடைந்துள்ளதாக தெரிவித்த ஸ்டார்மர், தேர்தலுக்குப் பின் இதுவரை 24,000 புலம்பெயர்ந்தோர் நாடுகடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.