4 நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை!
நீண்ட தூரம் சென்று தாக்குதல் நடத்தும் ஏவுகணை தயாரிப்பு திட்டத்தில் ஈடுபட்டுள்ள பாகிஸ்தானை சேர்ந்த 4 நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.
இது குறித்து அமெரிக்கா வெளியிட்டுள்ள பதிவில் ”பாகிஸ்தானின் அணு ஆயுதம் கொண்ட நீண்டதூர பாலிஸ்டிக் ஏவுகணை திட்டம் தொடர்பாக அந்நாட்டின் மீது புதிய பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தானின் ஏவுகணை திட்டத்தை மேற்பார்வையிடும் அரசுக்கு சொந்தமான தேசிய மேம்பாட்டு நிறுவனம் உட்பட 4 நிறுவனங்கள் மீதே பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது ” இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் ”நீண்ட தூரம் சென்று தாக்குதல் நடத்தும் ஏவுகணை திட்டத்தில் ஈடுபட்டுள்ள என்டிசி மற்றும் மூன்று வர்த்தக நிறுவனங்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடையானது துரதிஷ்டவசமானது மற்றும் ஒருதலைப்பட்சமானது. மேலும் அமெரிக் அரசின் குறித்த செயற்பாடு வருத்தமளிக்கிறது” இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.