மீண்டும் விஜய்யுடன் இணையும் கீர்த்தி சுரேஷ்?

12.10.2021 09:55:26

விஜய் படங்களின் அறிவிப்புகள் வந்த உடனேயே நாயகி யார் என்ற கேள்வி தான் அனைத்து தரப்பிலும் விவாதமாகும். விஜய்யுடன் ஜோடி சேர நாயகிகளும் போட்டி போடுவார்கள். அந்த வகையில் நீண்ட நாட்களாக ராஷ்மிகா விஜய்யுடன் ஜோடி போடும் ஆவலில் இருக்கிறார்.

விஜய் நடிப்பில் தற்போது உருவாகும் பீஸ்ட் படப்பிடிப்பே இன்னும் முடிவடையாத நிலையில் அடுத்த படத்துக்கான அறிவிப்பு வந்துவிட்டது. தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கும் இப்படத்தின் நாயகி யார் என்பது குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில், விஜய்க்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே, கீர்த்தி சுரேஷ் விஜய்யுடன் 'பைரவா', 'சர்கார்' படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.